ஜி.எஸ்.டி வசூல்: சென்னை மூன்றாவது இடம்!

இந்தியா தமிழகம்

ஜூன் மாத ஜி.எஸ்.டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில்  இந்திய அளவில் ஜி.எஸ்.டி. வருவாய் சேகரிப்பில் சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜூன் மாத ஜி.எஸ்.டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 12 சதவிகிதம் அதிகமாகும். இந்த ஆண்டு நான்காவது முறையாக மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளில் முதல் காலாண்டுக்கான சராசரி மாதாந்திர மொத்த ஜி.எஸ்.டி வசூல் முறையே ரூ.1.10 லட்சம் கோடி, ரூ.1.51 லட்சம் கோடி மற்றும் ரூ.1.69 லட்சம் கோடி ஆகும். மேலும் தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி வரியாக ரூ.9,600.63 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அளவில் ஜி.எஸ்.டி. வருவாய் சேகரிப்பில் சென்னை மண்டலம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா சீனிவாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருவாய் முந்தைய ஆண்டைவிட 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் பெரிய மாநிலங்களில் கர்நாடகா, மராட்டியத்தை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக மண்டலிகா சீனிவாஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தில் மூன்று தணிக்கை ஆணையங்கள் செயல்படுகின்றன. அதில் சென்னையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: எல்லோரும் குடிக்கலாமா… ஏ.பி.சி. ஜூஸை?

தனுஷ் உட்பட 14 நடிகர்கள் மீது புகார்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *