சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்!

இந்தியா

சென்னை – மைசூரு இடையே இயக்கப்படும் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று(நவம்பர் 11) தொடங்கி வைத்தார்.  

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(நவம்பர் 11) பெங்களூரு வந்தார்.

தனி விமானம் மூலம் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம்  எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு சென்றார்.

பின்னர் கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு பெங்களூரு கே.எஸ்.ஆர் நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி பெங்களூரு வழியாக இயக்கப்படும் சென்னை-மைசூரு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அத்துடன் பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தென் இந்தியாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.

சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் 12.30 மணிக்கு மைசூரை சென்றடையும்.

மணிக்கு 75.60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 6 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்னையில் இருந்து மைசூரை அடையும்.

வந்தே பாரத் ரயிலில் சென்னையில் இருந்து மைசூருவுக்கு செல்ல சாதாரண வகுப்பு கட்டணம் ரூ.921 ஆகவும், சிறப்பு வசதிகளுடன் பயணிக்க கட்டணமாக ரூ.1,880-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு சாதாரண வகுப்பு கட்டணம் ரூ.368 ஆகவும், சிறப்பு வசதி கட்டணம் ரூ.768 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கலை.ரா

இது சும்மா டிரைலர் தான் : நாளைக்கு தான் இருக்குது கன மழை!

பட்டத்து அரசனாக அதர்வா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0