ஒடிசாவில் நடந்த சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கம் ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் இன்று (ஜூன் 2) மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயில் மீது மோதியதில் 10-12 பெட்டிகள் வரை தடம் புரண்டுள்ளது. ரயிலுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தை அறிந்து வேதனை அடைந்தேன்.
துக்கமான இந்த நேரத்தில், என் எண்ணங்கள் எல்லாம் உயிரிழந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ஐ.நா.வா… அறநிலைத்துறையா? மனம் திறந்த பி.டி.ஆர்.