சந்திராயன் – 3 விண்கலம் வரும் ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
பூமியிலிருந்து 3 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருக்கும் நிலவுக்கு சந்திராயன் விண்கலத்தை அனுப்புவது என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) இலட்சிய திட்டங்களில் ஒன்று.
அதன்படி 2019ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு தோல்வியில் முடிந்த சந்திராயன்-2 விண்கலத்தை தொடர்ந்து சந்திராயன்-3 விண்கலத்தை உருவாக்கும் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டு வந்தது இஸ்ரோ.
நிலவுக்கு செலுத்துவதற்கு சந்திராயன்-3 விண்கலம் தயாராக உள்ளது என்றும் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் 19- ம் தேதிக்குள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும் கடந்த மாதம் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஜூலை 14 ஆம் தேதி சந்திராயன் – 3 விண்கலம் மதியம் 2.35 மணிக்கு விண்ணில் பாய உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எதேனும் தடங்கல் ஏற்பட்டால் விண்கலம் விண்ணில் ஏவுவது ஜூலை 19 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
அமைச்சர் ரகுபதிக்கு ஆளுநர் பதில்!
ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: தேர்தல் வழக்கில் வென்றது எப்படி? விளக்குகிறார் வழக்கறிஞர் வி.அருண்