சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 17) பிரிந்து சென்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட்டில் சந்திராயன் 3 விண்கலத்தை ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக அனுப்பி வைத்தது.
சந்திராயன் விண்கலம் 30 நாட்கள் பயணமாக புவி சுற்று வட்டப்பாதையை கடந்து நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நிலவின் ஈர்ப்பு விசைக்குள் இருக்கும் சந்திராயன் விண்கலம் நீள் வட்டபாதையில் நிலாவை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. சந்திராயன் 3 100 கி.மீ தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர் தனிப்பாதையில் நிலாவை சுற்ற தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செல்வம்
அஜித்தை யார் என்று கேட்டாரா துரைமுருகன்?