chandrayaan 3 started travelling in moons way

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3!

இந்தியா

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி நிலவை நோக்கி  பயணத்தை தொடங்கியது. விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று 2019-ல் சந்திரயான் 2-ல் செய்த தவறுகளை சரிசெய்து சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

விண்ணில் செலுத்தப்பட்ட 16 நிமிடத்தில் புவியின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

சந்திரயான் 3 விண்கலத்தை அடுத்தடுத்த சுற்றுப்பாதையில் உயர்த்தி நிலவை நோக்கிப் பயணிக்க வைத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். தொடர்ந்து 5 கட்டங்களாக புவியின் சுற்றுவட்டப் பாதையில் பயணித்த சந்திரயான் 3 நிலவின் சுற்றுப்பாதைக்குள் இன்று இரவு 7 மணிக்கு நுழைந்தது.

5 கட்டங்களாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணித்து பின்னர் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. சந்திரயான் 3 நிலவின் அடுத்த சுற்றுவட்டப் பாதைக்குள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி செல்லும் என்றும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மோனிஷா

அமைச்சரிடம் சீறிய ஸ்டாலின் : மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

சென்னை வந்தார் குடியரசுத் தலைவர்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *