சந்திராயன் 3 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
1,752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2,148 கிலோ உந்துவிசை செயல்திறன் என மொத்தம் 3,900 கிலோ எடையில் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தனர்.
சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு மிக அருகில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் நிலவில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்த பெருமையை பெற்றுள்ளன.
சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தது இஸ்ரோ. நேற்று மதியம் 1 மணிக்கு 25 மணி 30 நிமிடங்களுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியது.
இதனையடுத்து சந்திரயான் 3 இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சந்திராயன் 3-ஐ சுமந்து சென்ற ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் திட்டமிட்டபடி பிரிந்தன. அதன்படி புவி வட்டபாதையில் விண்கலம் 16 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
செல்வம்
திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முழு விவரம்!
ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!