சந்திரயான்-3: இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Jegadeesh

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி, இன்று (ஆகஸ்ட் 23) மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், விக்ரம் லேண்டரை தானியங்கி தரையிறக்கும் முறையில் தரையிறக்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளது  எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தரையிறக்கம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்திற்கு லேண்டர் அமைப்பின் வருகைக்காக காத்திருக்கிறோம், வந்ததும் இந்திய நேரப்படி மாலை 5.44 மணிக்கு லேண்டரை தரையிறக்கும் பணிகள் தொடங்கிவிடும்.

தானியங்கி தரையிறக்கும் அமைப்பின் கட்டளையின்படி, லேண்டர் அமைப்பில் உள்ள ராக்கெட் இன்ஜின்கள் எரியூட்டப்பட்டு உயரத்தை குறைக்கும் பணிகள் நடைபெறும். இதுதொடர்பான நேரலை இந்திய நேரப்படி இன்று மாலை 5.20 மணிக்கு தொடங்கும்.”என்று கூறப்பட்டுள்ளது.

40 நாட்கள் பயணத்தை தொடர்ந்து இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ள சூழலில் இஸ்ரோவின் திட்டத்தின் படி சரியாக தரையிறங்கி விட்டால் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடையும்.

இன்று தரை இறக்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான மாற்று திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சந்திரயான் – 3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது எப்படி?

சந்திரயான்-3… அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது: இஸ்ரோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel