நிலவை நெருங்கும் சந்திரயான் 3

Published On:

| By Monisha

chandrayaan 3 getting closer to moon

 

சந்திரயான் 3 விண்கலம் நிலவை நெருங்கியுள்ளதாக இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 9) தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது.

பயணத்தை தொடங்கிய 16 நிமிடங்களிலேயே புவியின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

தொடர்ந்து 5 கட்டங்களாக புவியின் சுற்றுவட்டப் பாதையில் பயணித்த சந்திரயான் 3 ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி நிலவின் முதல் சுற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கியது. தொடர்ந்து இன்று நிலவின் அடுத்த சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 பயணிக்க தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி சந்திரயான் 3-ன் அடுத்த சுற்றுப்பாதை குறைக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் தரையிறங்க உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று எந்த நாடும் அடியெடுத்து வைக்காத தென் துருவத்தில் சந்திரயான் விண்கலத்தை தரையிறக்க இஸ்ரோ முடிவெடுத்துள்ளது.

அவ்வாறு நடந்தால் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.

மோனிஷா

“அதானி, அமித்ஷா சொல்வதை மட்டும் தான் மோடி கேட்கிறார்” – ராகுல் காந்தி

கரூர்: செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ED மீண்டும் சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel