நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப் பாதையின் உயரம் 4 வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.
100 கி.மீ உயரத்தில் உள்ள சந்திரயான் விண்கலம் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நிலவினை சுற்றி வருகிறது.
நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ சந்திரயான் – 3 என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் கடந்த 5 ஆம் தேதி நுழைந்தது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் முறையாகவும், 9 ஆம் தேதி இரண்டாம் முறையாகவும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி மூன்றாவது முறையாகவும் சந்திரயானின் உயரம் குறைக்கப்பட்டது.
Chandrayaan-3 Mission:
Today’s successful firing, needed for a short duration, has put Chandrayaan-3 into an orbit of 153 km x 163 km, as intended.
With this, the lunar bound maneuvres are completed.
It’s time for preparations as the Propulsion Module and the Lander Module… pic.twitter.com/0Iwi8GrgVR
— ISRO (@isro) August 16, 2023
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) நான்காவது முறையாக சந்திராயனின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இறுதிக் கட்டமாக சுற்றுவட்டப்பாதையின் உயரம் 153*163 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாகவும், விண்கலத்தின் ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரிப்பது ஆகஸ்ட் 17, 2023 அன்று நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.