சந்திரயான்-3… அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது: இஸ்ரோ!

இந்தியா

நிலவின் தென்துருவத்தில் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்குகிறது.  இந்நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விக்ரம் லேண்டரில் உள்ள தொகுப்புகள் வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியாக சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 20ஆம் தேதி நிலவில் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டரில் உள்ள லேண்டர் இமேஜர் கேமராவின் மூலம் நிலவின் மேற்பரப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலவின் புதிய படங்களை வெளியிட்ட நிலையில் தற்போது வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

முன்னதாக, கடைசி கட்டத்தில் லேண்டரின் செயல்பாடு இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டால் நிலவில் தரையிறங்கும் திட்டத்தை வருகிற 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கலைஞர் நூற்றாண்டு விழா: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

கலைஞர் நூற்றாண்டு விழா: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *