உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட்

இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று(நவம்பர் 9) பதவியேற்றுக் கொண்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக தனஞ்செய யஷ்வந்த் சந்திரசூட்டை நியமிக்க யு.யு.லலித் கடந்த மாதம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன்படி இன்று(நவம்பர் 9) குடியரசுத் தலைவர் மாளிகையில் டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், சட்டத்துறை அதிகாரிகள், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தான் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகிப்பார்.

அயோத்தியா வழக்கு, ஆதார் வழக்கு, சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற வழக்கு, தன்பாலின சேர்க்கையாளர்களை அனுமதிக்கலாம் என்ற வழக்கு, ரகசியம் காப்பது என்பது தனிநபர்களுக்கான அடிப்படை உரிமை என்று சொன்னது என பல அதிரடியான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

எனவே தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளதால் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் நல்ல தீர்ப்புகளை வழங்குவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கலை.ரா

மைதானத்தில் கிண்டல் செய்த ரசிகர்: ரிஷப் பந்த் பதிலடி!

பிரியாணி சண்டை : கணவரும் உயிரிழப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.