விண்ணில் பாய சந்திரயான்-3 தயார்: இஸ்ரோ அறிவிப்பு!

Published On:

| By christopher

நிலவுக்கு செல்லும் சந்திரயான்-3 விண்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 28) அறிவித்துள்ளது.

பூமியிலிருந்து 3 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் இருக்கும் நிலவுக்கு சந்திராயன் விண்கலத்தை அனுப்புவது என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) இலட்சிய திட்டங்களில் ஒன்று.

அதன்படி 2019ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டு தோல்வியில் முடிந்த சந்திரயான்-2 விண்கலத்தை தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கும் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டு வந்தது இஸ்ரோ.

தற்போது அதன் சோதனைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், சந்திரயானை ஏந்தி செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையை இஸ்ரோ தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் இன்று செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், ”நிலவுக்கு செலுத்துவதற்கு சந்திரயான்-3 விண்கலம் தயாராக உள்ளது. வரும் ஜூலை மாதம் 12-ந்தேதி முதல் 19-ந்தேதிக்குள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்படும்.

சந்திராயன் 3 விண்கலத்தின் முழு அளவிலான பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. எனினும் ராக்கெட் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்த பின்னரே சரியான தேதி அறிவிக்கப்படும்” என இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கர்நாடகாவில் அரிசிக்கு பதிலாக பணம்: குமுறும் சித்தராமையா

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா டீசர் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel