நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை உயர்வால் மக்கள் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியில் மகாராஷ்டிராவின் பங்களிப்பு சுமார் 80 சதவிகிதம் ஆகும், எனவே வெங்காய விவசாயிகள் இந்த திடீர் தடையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: செலவே இல்லாமல் அழகாகலாம்!
கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!
2024 புத்தாண்டில் கார் வாங்கப் போகிறீர்களா? இதைக் கொஞ்சம் யோசிங்க…!