முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபட் பயஸ் ஆகிய 6 பேரும் 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்ததையடுத்து, அவர்களை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டது.
பின்னர் இவர்கள் 6 பேரும் நவம்பர் 12 ஆம் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தனர்.
விடுதலையான 6 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 6 பேர் விடுதலை செய்யப்படுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா