இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் நிதித்துறையின் தரம் மேம்பட்டு வலுப்படுத்தப்படுவதுடன், குடிமக்களின் எளிதான வாழ்க்கைக்கும் உதவுகிறது.
அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செல்போன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் யு.பி.ஐ தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்த பிறகு, பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
தெருவோர டீக்கடை, பூக்கடைகளில் ரூ.5, 10 எனக் குறைந்த அளவிலான தொகைகூட இந்த யு.பி.ஐ மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2017-18 நிதியாண்டில் ரூ.2,071 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், 2021-22 நிதியாண்டில் ரூ.8,840 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்தது.
2022-23 நிதியாண்டை பொறுத்தவரை 2022 மார்ச் முதல் டிசம்பர் 31 வரை 9 மாதங்களில் ரூ.9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2017-18 நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 1,962 லட்சம் கோடியாக இருந்தது.
இது 2022-23 நிதியாண்டில் டிசம்பர் 31, 2022 வரை 2,050 லட்சம் கோடி அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு அதிகரித்துள்ளது.
மேற்படி தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொரோனா பெருந்தொற்றும் ஒரு காரணமாக இருந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்த காலகட்டத்தில்தான் அதிகரித்துள்ளது.
நம்முடைய மக்கள் ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தாலும்கூட, எல்லா மக்களும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தத் தயாராகி விட்டார்கள் என்று சொல்ல முடியாது என்பதே உண்மை.
குட்கா தடை ரத்து : தமிழக அரசு மேல்முறையீடு!
”அதானியை காப்பாற்ற நினைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல்காந்தி