ஆபாச வெப் சீரிஸ்கள்: மத்திய அரசு முடக்கிய 18 ஓடிடி தளங்கள் எவை?

இந்தியா

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓடிடி தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

ஓடிடி தளங்கள் சிலவற்றில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சித்தரிக்கப்பட்டு இருந்ததை மத்திய அரசு கண்டறிந்தது.  இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக…

Dreams Films
Voovi
Yessma
Uncut Adda
Tri Flicks
X Prime
Neon X VIP
Besharams
Hunters
Rabbit
Xtramood
Nuefliks
MoodX
Mojflix
Hot Shots VIP
Fugi
Chikooflix
Prime Play

ஆகிய 18 ஓடிடி தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் முடக்கப்பட்ட ஓடிடி தளங்களுக்கு சொந்தமான 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதளக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், பெண்களை அவதூறாக சித்தரிப்பது, ஐடி சட்டப்பிரிவு உள்ளிட்டவற்றின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

ஹெல்த் டிப்ஸ்: ஜிம்முக்கு செல்ல நினைப்பவரா நீங்கள்? ஒரு நிமிஷம்..!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : சைதாப்பேட்டை வடகறி

தேர்தல் பத்திர நிதி : ரூ.6,060 கோடி வாங்கிய பாஜக – திமுக, அதிமுக வாங்கியது எவ்வளவு?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

2 thoughts on “ஆபாச வெப் சீரிஸ்கள்: மத்திய அரசு முடக்கிய 18 ஓடிடி தளங்கள் எவை?

  1. betine giris: betine sikayet – betine sikayet
    gates of olympus demo turkce [url=https://gatesofolympusoyna.online/#]gates of olympus giris[/url] gates of olympus oyna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *