பான்கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு இன்று (மார்ச் 28) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் நிதியமைச்சகம் கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
எனினும் நாட்டில் அப்போது நிலவிய கொரோனா தொற்று பரவல் காரணமாக அதற்கான காலக்கெடு வரும் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அவகாசத்திற்கு இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான அவகாசத்தை வரும் ஜூன் 30 வரை என 3 மாதங்களுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) நீட்டித்துள்ளது.
இந்த காலக்கெடுவுக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகி விடும் என்றும், அந்த நபர் எந்த ஒரு அரசு சார்ந்த, வங்கிகளில் பான் கார்டை வழங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023 ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைத்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என சிபிடிடி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுலுக்கு எதிராக திரும்பும் கூட்டணிக் கட்சி தலைவர்கள்!
அப்பீல் பன்னீர்… அப்பால் எடப்பாடி… அதிமுக பொதுச் செயலாளர் ஆன வரலாறு!