ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன் ஆகிய 6 பேரும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
6பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் அரவிந்த் சர்மா நேற்று(நவம்பர் 17) மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மறு சீராய்வு மனுவில் உள்ளது என்ன?
இந்த வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராகச் சேர்க்காத காரணத்தினால் உரிய வாதங்களை முன்வைக்க முடியவில்லை.
இதனால் ஆறு பேரும் விடுதலை ஆகியுள்ளனர். முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு விரும்புகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பானது இயற்கை நீதி கொள்கைகளுக்கு எதிரானது.
இந்த வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க வேண்டும்.
பேரறிவாளனுடன் ஒப்பிடுகையில் மேல்முறையீடு செய்தவர்களில் 4பேர் இலங்கையை சேர்ந்தவர்கள்.
அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியமான பங்கை கொண்டிருக்கிறார்கள். அதனால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு இவர்கள் ஆறு பேருக்கும் பொருந்தாது.
அரசியல் சாசனம் 7வது அட்டவணையின்படி வெளிநாட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. மத்திய அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் 6பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சட்டப்பூர்வமான குறைபாட்டைக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்ற முக்கியமான தீர்ப்புகளில் மத்திய அரசின் உதவி மிகவும் முக்கியத்துவமாக இருக்கும். ஏனெனில், நாட்டின் பொது அமைதி, குற்றவியல் நீதிகளில் பெரும் விளைவுகளை இந்த தீர்ப்புகள் ஏற்படுத்தும்.
இதுபோன்ற முக்கியமான வாதங்களை முன்வைக்காததால் தீர்ப்பில் வெளிப்படையான பிழைகள் உள்ளது. இதனால் நீதி தவறிழைக்க வழிவகுக்கிறது என்று மறுசீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து: கே.பாலகிருஷ்ணன்
வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!