மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 18) ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்காகக் காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 42 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி மாதம் 18,000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு 7,560 ரூபாய் அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வந்தது. இது 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட நிலையில் 8,640 ரூபாயாக அகவிலைப்படி உயரும்.
இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் ராகூர் கூறியுள்ளார்.
பிரியா
மனிதம் மரத்து போய்விட்டதா?: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!