இந்திய உணவுக் கழகத்துக்கு ரூ.10,700 கோடி நிதி… அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

Published On:

| By Selvam

பிரதமர்  மோடி தலைமையில்  நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2024-25 நிதியாண்டில் நடைமுறை மூலதனத்திற்காக ரூ.10,700 கோடி முதலீட்டை இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் துறையை மேம்படுத்தவும், நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதிலும், இந்தியாவின் வேளாண் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் அரசின் உறுதியான உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.

இந்திய உணவுக் கழகம் 1964 ஆம் ஆண்டு ரூ.100 கோடி அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மற்றும் ரூ.4 கோடி பங்கு மூலதனத்துடன் தனது பயணத்தைத் தொடங்கியது.  இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரித்ததன் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.11,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக பிப்ரவரி 2023-ல் அதிகரித்தது.

2019-20 நிதியாண்டில் ரூ.4,496 கோடியாக இருந்த இந்திய உணவுக் கழகத்தின் பங்கு 2023-24 நிதியாண்டில் ரூ.10,157 கோடியாக அதிகரித்துள்ளது.  இப்போது, இந்திய உணவுக் கழகத்திற்கு கணிசமான தொகையான ரூ.10,700 கோடி பங்குத் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய உணவுக் கழகத்தை நிதி ரீதியாக வலுப்படுத்துவதுடன், இந்த மாற்றத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முன்முயற்சிகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையில், உணவு தானியங்களை கொள்முதல் செய்வது, முக்கிய உணவு தானிய கையிருப்பைப் பராமரித்தல், நலத்திட்டங்களுக்காக உணவு தானியங்களை விநியோகித்தல் மற்றும் சந்தையில் உணவு தானிய விலைகளை நிலைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய உணவுக் கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல் மற்றும் இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாட்டுத் திறன்களில் முதலீடு ஆகியவற்றில் அரசின் இரட்டை உறுதிப்பாடு, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், வேளாண் துறையை வலுப்படுத்துதல் மற்றும் தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

come back செந்தில்பாலாஜி…  calm back  நிர்வாகிகள்- கள ஆய்வில் நடந்தது என்ன?

‘செயற்கை நுண்ணறிவு’ பயன்பாட்டில் எச்சரிக்கை… ஆஸ்திரேலியா மாநாட்டில் அப்பாவு பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share