பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்தில் ராபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியுள்ளது.
கடுகு குவிண்டாலுக்கு ரூ.300-ம், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு, கோதுமை, குங்குமப்பூ, பார்லி ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.210, ரூ.150, ரூ.140, பார்லி ரூ.130 உயர்ந்தப்பட்டுள்ளது.
கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 2,425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2,275 ஆக இருந்தது. ராபி பயிர்களுக்கான இந்த அதிகரித்த குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும்
மேலும், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சுமார் ரூ.2,642 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் பாலம்!
இந்திய ரயில்வேயின் முக்கிய மையமான வாரணாசி ரயில் நிலையம், முக்கிய மண்டலங்களை இணைக்கிறது. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது.
போக்குவரத்து அதிகமான இந்தச் சந்திப்பு கடுமையான நெரிசலை எதிர்கொள்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, கங்கை ஆற்றின் மீது ஒரு புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் தேவையாகும். இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளது.
இது பிராந்தியத்தில் விரிவான வளர்ச்சியின் மூலம் பிராந்திய மக்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றும். இது அவர்களின் வேலைவாய்ப்புகளையும் சுய வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 2 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 30 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சேலம் அக்கா, தம்பி கொலை… கைது செய்யப்பட்ட தனசேகரனுக்கு நீதிமன்ற காவல்!
போன் போட்ட புஸ்ஸி ஆனந்த் : எடுக்காத விஜய்… என்ன நடக்கிறது தவெகவில்?