சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடங்கியது!

Published On:

| By Kalai

cbse exam

10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு  நாடு முழுவதும் இன்று(பிப்ரவரி 15) தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கின. 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு இன்று தொடங்கியது.

12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வு தொடங்கியுள்ளது.

10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை 12 லட்சத்து 47 ஆயிரத்து 364 மாணவர்கள், 9 லட்சத்து 39 ஆயிரத்து 566 மாணவிகளும், 10 இதர பிரிவினர் என மொத்தம் 21 லட்சத்து 86 ஆயிரத்து 940 பேர் எழுதுகின்றனர்.

12 -ம் வகுப்பு பொறுத்த வரையில் 9 லட்சத்து 51 ஆயிரத்து 332 மாணவர்களும், 7 லட்சத்து 45 ஆயிரத்து 433 மாணவிகள் உட்பட மொத்தம் 16 லட்சத்து 96 ஆயிரத்து 770 பேர் தேர்வெழுதிகின்றனர்.

நாடு முழுவதும் 24 ஆயிரத்து 491 பள்ளிகளிலிருந்து 7 ஆயிரத்து 240 மையங்களில் மொத்தமாக 76 பாடங்களுக்கு மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.

கலை.ரா

பரபரப்பைக் கூட்டிய ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு!

40 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை: மீண்டும் நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share