சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 28,471 பள்ளிகள் மூலம் 16,80,256 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் 16,60,511 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 14,50,174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 87.33 சதவிகிதமாகும். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை ஒப்பிடுகையில் 5.38 சதவிகிதம் குறைவு என்றாலும், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
2022ல் 14,35,366 பேர் தேர்வெழுதி 13,30,662 பேர் வெற்றி பெற்றனர். இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையும், வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவிலும் திருவனந்தபுரம்(99.91), பெங்களூர்(98.64), சென்னை(97.40) ஆகிய மண்டலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த தேர்வில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் 6.01 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் உள்ளது. மாணவர்கள் 84.67 சதவிகிதம் பேரும், மாணவிகள் 90.68 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிரியா
டெல்லியில் ‘ஸ்பை’ டீசர் வெளியீடு!
பேராசிரியர் பணியிடங்கள்: போராட்டம் அறிவித்த அரசு மருத்துவர்கள்