சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த ஆண்டு 22.51 லட்சம் மாணவர்கள், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 22,38,827 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 21,65,805 மாணவர்களில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகி உள்ளது.
21.65 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி 0.48 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில், கேரளா 99.75 சதவீத தேர்ச்சியுடன் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 99.30 சதவீத தேர்ச்சியுடன் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 2.04 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 94.75 சதவீதமும், மாணவர்கள் 92.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர்கள் 91.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யின் “The GOAT” இசை வெளியீட்டு விழா எங்க தெரியுமா?
கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரி மனு : நீதிபதிகள் மறுப்பு!