சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமணி எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி, சென்னையில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாகவும், தமிழக அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும்,
சிலை திருட்டு தொடர்பான சிறப்பு பெஞ்சை கலைத்ததாகவும், அவர் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜீயம் முடிவு செய்தது.
கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய அவர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில், நேற்று (டிசம்பர் 16) மக்களவையில் திமுக உறுப்பினர் ஏபிகே சின்ராஜ் தஹில் ரமணி மீதான சிபிஐ வழக்கு குறித்து,
“சிபிஐ, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமணிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உச்சநீதிமன்றத்திடமிருந்து ஏதேனும் வழிகாட்டுதல்களை பெற்றுள்ளதா? அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதா? ” என்று கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய பணியாளர்கள் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்,
“சிபிஐ, உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளரிடமிருந்து கடந்த 26.09.2019-ஆம் தேதி தஹில் ரமணி மீதான வழக்கை விசாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுள்ளது. சிபிஐ விசாரணையில் அவர் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்ததுள்ளது.” என்றார்.
செல்வம்
இன்பநிதிக்கும் அழைப்பு விடுக்கும் மூத்த அமைச்சர்கள்!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: பன்னீர் அழைப்பு!