I.N.D.I.A பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ், திமுக உட்பட 26 எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், இந்த பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை நேற்று (ஆகஸ்ட் 3) தாக்கல் செய்தார். இச்சூழலில் , இந்த மனு மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 4) டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதை விசாரித்த நீதிபதிகள் 26 எதிர்க்கட்சிகளும் பதிலளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசும் பதிலளிக்கும் படி ஆணை பிறப்பித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுகவில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா
சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி: காவல்துறை அணிவகுப்பு!