உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை இன்று(நவம்பர் 29) மீண்டும் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த மத்தியஅரசு 2017ஆம் ஆண்டு தடை விதித்தது.
மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது.
தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் இவ்வழக்கு கடந்த நவம்பர் 24ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.
அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தாா் லூத்ரா, ‘சட்டம் இயற்றப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காக விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘குத்துச்சண்டை, வாள்சண்டை போட்டிகளில் காயங்கள் ஏற்படும் என்று தெரிந்துதான் கவனத்துடன் வீரா்கள் பங்கேற்கிறாா்கள்.
ஆனால் விலங்குகளுக்கு சட்டப்படி இந்த சுதந்திரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்தப் போட்டியில் உயிரிழப்பு, காயமடைபவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன’ என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 29ஆம் (இன்று)தேதிக்கு ஒத்திவைத்தனா்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய போர்ச்சுகல்
சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்