சீட் பெல்ட் அலாரம்: மத்திய அரசின் புதிய விதிகள்!

இந்தியா

பாதுகாப்பு நடவடிக்கையாக காரின் பின் இருக்கை சீட் பெல்ட் அலாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சாலை விபத்துக்களில் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில், கார்களில் பின் இருக்கையில் அமர்வோர் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிப்பதை கட்டாயமாக்கும் வகையில் வரைவு மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று (செப்டம்பர் 21) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த செப்டம்பர் 9ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுசாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “கார் சீட் பெல்ட் அலாரங்களை முடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாதனங்களை விற்பனை செய்வதை நிறுத்துமாறு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு இறுதிக்குள் சாலை விபத்துக்கள் மற்றும் அது தொடர்பான இறப்புகளை பாதியாகக் குறைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

அதற்காக, இந்த ஆண்டு அனைத்து கார்களிலும் கட்டாயமாக 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்பதற்கான வரைவை அரசாங்கம் இறுதி செய்ய உள்ளது.

காரின் பின் இருக்கை சீட் பெல்ட் அலாரத்தை கட்டாயமாக்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

car seat belt alarms central govenment new rules

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவர் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தும், சீட் பெல்ட் அணியாமல் இருந்தது உயிரிழப்புக்கு ஒரு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, காரில் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்துஅமைச்சகம் கொண்டுவர இருக்கிறது.

இதன்படி, ஓட்டுநர் இருக்கையும் சேர்த்து 8 பேருக்கு மிகாமல் அமரும் எம் 1 வாகனத்தில் ஓட்டுநர் அதிவேகமாக வாகனத்தை இயக்கினால், எச்சரிக்கை ஒலி எழுப்புவது கட்டாயம்.

அதுபோல், நான்கு பேர் அமரும் என் 1 வகை வாகனங்களில் பின் இருக்கையில் அமர்வோர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், அவர்களுக்கு ஆடியோ-வீடியோ மூலம் எச்சரிக்கை செய்யும் அலாரம் பொருத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக வாகனம் சென்றாலும் அலாரம் ஒலி எழுப்பப்பட வேண்டும்.

car seat belt alarms central govenment new rules

இந்த வகை வாகனங்களுக்கு ரிவர்ஸ் பார்க்கிங் எச்சரிக்கை மணி கட்டாயம் இருக்க வேண்டும். சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கினால் ஓட்டுநரையும், பயணிகளையும் எச்சரிக்கை செய்யும் வகையில் 3 லெவல்களில் எச்சரிக்கை செய்தல் அவசியமாகும். முதல் லெவல் எச்சரிக்கை என்பது, காட்சி எச்சரிக்கை.

அதாவது ஓட்டுநர், அவருக்கு அருகே இருப்போர், பின்பக்க இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் வாகனத்தின் எச்சரிக்கை விளக்கு எரியும்.

2வது லெவல் எச்சரிக்கை என்பது, வாகனத்தை ஓட்டுநர் வேகமாகச் செலுத்தும்போதும் சீட் பெல்ட் அணிவதை ஆடியோ மூலம் எடுத்துச் சொல்லும் எச்சரிக்கை ஒலி வைப்பது ஆகும்.

3வது லெவல் எச்சரிக்கை என்பது, சீட் பெல்ட்டை சரியாக அணியாவிட்டாலும், சரியாக பொருந்தாமல் இருந்தாலும் எச்சரிக்கை மணி ஒலிப்பது ஆகும்.

இதற்குமுன் இருந்த விதிப்படி, சீட் பெல்ட் என்பது, ஓட்டுநர் மற்றும் முன்பக்கத்தில் அமர்ந்திருப்போர், சீட் பெல்ட் அணியாமல் இருந்தால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

இந்த வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை அக்டோபர் 5ம் தேதிக்குள் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

ஒன்றிய அரசின் அறிவுரை தேவையில்லை: நிதியமைச்சர் பிடிஆர்

டிஜிட்டல் திண்ணை:சீனியர்களுக்கு மாற்றுப் பதவிகள்!  சபரீசன் வைக்கும் புது செக்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.