கார் விற்பனை: ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
2022 ஆம் ஆண்டில் ஜப்பானைவிட கூடுதலாக 50,000 கார்களை விற்பனை செய்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை ‘நிக்கேய் ஏசியா’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 2021ஆம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா 1.5 கோடி கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்திலும், 44 லட்சம் கார்களை விற்பனை செய்து ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தது.
இந்த நிலையில் ஜப்பானில் கடந்த 2022ஆம் ஆண்டு கார் விற்பனை 42 லட்சமாகக் குறைந்தது. அதே நேரம் இந்தியாவில் 42.5 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
இதன் மூலம் 2022ஆம் ஆண்டில், ஐப்பானைவிட கூடுதலாக 50,000 கார்களை விற்பனை செய்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் பெட்ரோல், டீசல் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளதாகவும், மின்சார கார்களின் விற்பனை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
ட்விட்டரில் வர உள்ள அதிரடி மாற்றங்கள் : எலான் மஸ்க் அறிவிப்பு