ஒரே நாளில் ரூ. 8,472 கோடிக்கு 30,179 கார்கள் புக்கிங் ஆகி மகேந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தமே ஒரு லட்சம் எலக்ட்ரிக் கார்கள்தான் விற்பனையாகி இருந்தது. அப்படியிருக்கையில், ஒரே நாளில் 30 ஆயிரம் எலக்ட்ரிக் கார் புக்கிங் செய்யப்பட்டால் ஆச்சரியம்தானே.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மகேந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்களின் புக்கிங் அறிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பான SUVs XEV 9E மற்றும் BE 6 ரக கார்கள் ஒரே நாளில் 30,179 புக்கிங் ஆகியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 8,472 கோடி ஆகும்.
இதில், XEV 9E 56 சதவிகிதமும் BE 6.44 சதவிகிதமும் புக் ஆகியுள்ளது. BE 6 18 .90 லட்சம் அடிப்படை விலை. XEV 9E 21 .90 அடிப்படை விலையாக உள்ளது.
கடந்த 2024 நவம்பர் மாதத்தில்தான் இந்த மாடல் கார்கள் குறித்து மகிந்த்ரா நிறுவனம் அறிவித்தது. தற்போது, முதல் நாளிலேயே லோக்கல் மற்றும் சர்வதேச சந்தையில் இந்திய எலக்ட்ரிக் கார்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டும் விதத்தில் இந்த புக்கிங் அமைந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்து கொண்டே செல்கிறது. வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.