சிறப்பு தள்ளுபடி: கார், பைக், மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரிப்பு!

இந்தியா

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இருந்த மந்தமான விற்பனைக்குப் பிறகு வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனங்கள் பண்டிகைகளை யொட்டி அளித்த சிறப்பு தள்ளுபடிகள் காரணமாக அவற்றின் விற்பனை அதிகரித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஓணம், நவராத்திரி, தீபாவளி, தசரா பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதைத் தொடர்ந்து வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் 30 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றன.

கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கு முன்னதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை தொடர்பான முன்பதிவு 10 சதவிகிதம் அதிகரித்தது.

அதேபோல, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் முதல் நாளில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் விற்பனை அதிகரித்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களின் விற்பனை 15 முதல் 16  சதவிகிதம்  வரை உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சராசரியாக 3,30,000 வரையிலான எண்ணிக்கையில் வாகன விற்பனை நடந்துள்ளதாகவும், இது பண்டிகைக் காலங்களில் 15  சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டை விட நுகர்வோர் பயன்பாட்டு மின்னணு சாதனங்கள் இந்த ஆண்டில் 7 முதல் 8  சதவிகிதம் வரைக்கும் உயர்ந்துள்ளது.

ஓணத்தின்போது உறைவுத் தன்மை இல்லாத குளிர்சாதனங்களின் விற்பனை 15 சதவிகிதம் அதிகரித்து, ஒற்றைக் கதவு கொண்ட குளிர்சாதனங்களின் விற்பனை 7 சதவிகிதம் வரைக்கும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு தானியங்கி சலவை இயந்திரங்களின் விற்பனை 12 முதல் 13 சதவிகிதம் வரைக்கும் உயர்ந்து, அரை தானியங்கி சலவை இயந்திரங்களின் விற்பனை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த ஆண்டின் பண்டிகைக் காலங்களில் கிக் மற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில்லறை வணிகம், இணைய வர்த்தகம், விநியோக நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் போன்றவை ஆட்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் என தனியார் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் தொழில் நிறுவனங்களில், இணைய வர்த்தகத்தின் தேவை கடந்த ஆண்டை விட 22 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை சமைத்த அறிஞர் அண்ணா

டாப் 10 நியூஸ் : ஸ்டாலினை சந்திக்கும் திருமாவளவன் முதல் மூக்குத்தி அம்மன் 2 பட அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா : பிரெட் மஞ்சூரியன்

இன்று மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *