பஞ்சாப்பை தனி நாடாக கேட்டு போராடி வரும் காலிஸ்தான் பிரிவினை இயக்கத்தினர் கனடா நாட்டில் சுதந்திரமாக இயங்கி வருகின்றனர்.
சமீபத்தில் அங்குள்ள இந்து கோயில் மீதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தியாவின் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களில் வேண்டும் என்றே பிரச்சினை செய்வதே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.
இப்போது கனடாவில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மற்றொரு பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். கனடா நாட்டு மக்களுக்கு எதிராகவே காலிஸ்தான் ஆதரவாளர்கள் செயல்பட தொடங்கி விட்டனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இது கனடாவின் சர்ரே என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் எல்லாம் சேர்ந்து ஒரு அணிவகுப்பை நடத்தியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவு கொடிகள் அந்த வீடியோவில் காணப்படுகிறது.
பேரணியில் கனடா மக்களுக்கு எதிராக காலிஸ்தானிய ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
???????????????????????????????????????????????? Where The Hell Is Khalistan ??? https://t.co/ICEx1cH6ed
— pennine-rainbows A BritZionist????️ (@pennine12701) November 15, 2024
“வெள்ளை இன மக்கள் ஐரோப்பாவிற்கும் இஸ்ரேலுக்கும் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று அவர்கள் கத்தினர்.
கனடா நாட்டு மக்களை “படையெடுப்பார்கள்” என்றும் “இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றும் கோஷமிட்டுள்ளனர்.
சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், ” கனடா.. எங்கள் சொந்த நாடு. கனடா நாட்டவரே நீங்கள் உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றும் கோஷம் எழுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மோகன் லால் இயக்கும் ‘பரோஸ்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘அரியலூர் அரிமா’… அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்