கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது, அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கனடா போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் டொரான்டோவில் இருந்து 50 கி.மீ தொலைவில் பிராம்ப்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஹிந்து சபா மந்திர் என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், கனடாவிலும் குறிப்பாக சீக்கியர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் பரவி வருகிறது.
இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்து கோவில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனடா மக்களும் தங்களது மதத்தை பின்பற்ற சுதந்திரம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கனடா நாட்டு போலீசில் பணி புரியும் ஹரீந்தர் ஷோகி என்பவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது பரவிய வீடியோவில் தெரிய வந்தது. கையில் காலிஸ்தான் கொடி ஏந்தி இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அவர் போலீஸ் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டம் நடந்த நேரத்தில் ஹரீந்தர் ஷோகி விடுமுறையில் இருந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஈரான் நாட்டில் வாழும் யூதர்கள்… 20 வயது இளைஞருக்கு தூக்கு!
குறைந்தது தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?