Calling husband 'black' is cruel karnataka high court

கணவனை ‘கருப்பன்’ என அழைப்பது கொடுமையானது : நீதிமன்றம்!

இந்தியா

கணவனை ’கருப்பன்’ என நிறத்தைக் குறிப்பிட்டு அவமானப்படுத்துவது கொடூரமானது என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது அந்த ஆணுக்கு 43 வயது, பெண்ணுக்கு 41 வயது.

இந்நிலையில், 2012ஆம் ஆண்டு பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் கணவன் விவகாரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை குடும்ப நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யவே, அந்த கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த விசாரித்த உயர் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது.

இதில் நீதிமன்றம் குறிப்பிட்ட விஷயங்கள் கவனிக்க வேண்டியதாக உள்ளது.

‘கணவர் கருப்பாக இருக்கிறார் என்ற காரணத்தினால் அவரது மனைவி தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார்.

இதுதவிர தனது மாமியாரும், கணவரும் தன்னை கொடுமை படுத்துவதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A (திருமணமான பெண்ணைக் கொடுமைப்படுத்துதல்) கீழ் வழக்குத் தொடுத்துள்ளார்.

அந்த பெண் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழும் கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குடும்ப நல நீதிமன்றத்திலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து கணவர் குடும்பம் தன்னை மோசமாக நடத்துவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுமட்டுமின்றி தன்னிடம் வரதட்சணை கேட்டதாகவும், குழந்தையுடன் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்றும், தன்னுடைய கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பொய் புகார் கூறியுள்ளார்.

வேறு பெண்ணுடன் தனது கணவருக்குத் தொடர்பு இருப்பதாக அந்த பெண் கூறியிருப்பது முற்றிலும் ஆதாரமற்றது.

விசாரணையில் கணவர் கருப்பாக இருப்பதால் அவரது மனைவி இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. வேறு எந்த காரணமும் இல்லாமல் அவரது மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்றிருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

தோல் கருப்பாக இருக்கிறது என்பதால் அவரை ‘கருப்பன்’ என்று அழைத்து அவமானப்படுத்துவது கொடுமையானது. இதுவே அவர் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காமல் உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு வலுவான காரணமாகும்.

எனவே அவர்களுக்கு விவாகரத்து வழங்குகிறோம்” என்று நீதிபதிகள் அலோக் ஆராதே, அனந்த் ராமநாத் ஹெக்டே ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பிரியா

ஃபகத் பாசில் பிறந்தநாள்: ட்ரீட் கொடுத்த புஷ்பா படக்குழு!

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பதிவுக்கட்டணம் உயர்வு?: பதிவுத்துறை விளக்கம்!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *