மாசுபட்ட நகரங்களில் முதலிடம் : அழகான மாநிலத்தில் அலங்கோலமான பைர்னிஹட்

Published On:

| By Kumaresan M

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து World Air Quality Report 2024 வெளியிடப்பட்டுள்ளது. மிக மோசமாக காற்று மாசுபட்ட உலகத் தலைநகரங்களில் இந்திய தலைநகர் டெல்லி தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே மிக மோசமாக காற்று மாசுபட்ட முதல் 10 நகரங்களில் 6 இந்தியாவில்தான் உள்ளது. உலகிலேயே மிக மோசமாக மாசு கொண்ட நகரம் எது தெரியுமா? பைர்னிஹட் என்ற சின்னஞ்சிறு நகரம்தான். இதுவும் இந்தியாவில்தான் உள்ளது. அதுவும், அழகான மலை பிரதேசங்கள் நிறைந்த மேகலாயாவில் இந்த நகரம் அமைந்துள்ளது. Byrnihat most polluted town

டெல்லியை விட மிக மோசமாக இந்த நகரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேகலாயா/ அஸ்ஸாம் மாநிலத்தில் எல்லையில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இரும்பு தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, மதுபான தயாரிப்பு ஆலைகள் என 41 தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகள் ஏராளமாகவுள்ளதால் டிரக் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இதனால், இந்த நகரில் காற்று மாசுபாடு தாறுமாறாக உள்ளது.

காற்றில் 2.5 முதல் 10 வரை மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண் துகள்கள் பிஎம் 10 என்று அழைக்கப்படுகின்றன. இவை உடலுக்கு ஓரளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. அடுத்து, 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண்துகள்கள் பிஎம் 2.5 என்று அழைக்கப்படுகின்றன. இந்த பிஎம் 2.5 நுண்துகள்கள்தான் உடலுக்கு மிக தீங்கை விளைவிக்கும் தன்மை கொண்டது. இந்த துகள்கள்தான் பைர்னிஹட் நகர காற்றில் நிறைந்து கிடக்கின்றன. Byrnihat most polluted town

பைர்னிஹட் நகரத்தில் தொழிற்சாலைகளை கண்காணிப்பதில் நீண்ட காலமாகவே அக்கறை காட்டப்படவில்லை. கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எந்த கண்காணிப்பும் இல்லாத காரணத்தினால், ஒரு காலத்தில் அழகாக இருந்த இந்த நகரம் இப்போது, அலங்கோலமாகி கிடக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share