பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி!

இந்தியா

ஆந்திர மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டத்தில் அம்மாநிலத்தின் அரசு சொகுசு பேருந்து நள்ளிரவில் கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சம்பவ இடத்தில் விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமத்தினர்.

இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

மோனிஷா

“ரோகித் சர்மாவை விமர்சிப்பது நியாயமற்றது” – ஹர்பஜன் சிங் 

உக்ரைன் நேட்டோவுடன் இணைவதில் சிக்கல்: ஜோ பைடன் 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *