கிசான் கடன் அட்டைகள் மூலம் வழங்கப்படும் குறுகிய கால கடன் ரூ.3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. budget 2025 Kisan Loan Increase
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில் இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவயில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி பேசி வருகிறார்.
விவசாயிகளுக்கான அறிவிப்பு! budget 2025 Kisan Loan Increase
இந்த பட்ஜெட் 10 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று கூறி முதலில் வேளாண் துறைகளுக்காக அறிவிப்புகளை வெளியிட்டார்.
“பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு வைத்துள்ளோம்.
கிசான் கடன் அட்டைகள் மூலம் 7.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டித் தொகை திட்டம் மூலமாக வழங்கப்படும் குறுகிய கால கடன் 3 லட்சம் முதல் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
நீண்ட கால மற்றும் குறுகிய கால கடனை உறுதி செய்தல், நீர்ப்பாசன வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை 1.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிக்கப்படும்” என்று அறிவித்தார் நிர்மலா சீதாராமன். budget 2025 Kisan Loan Increase