2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆண்டிற்கு 7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவை இல்லை என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடுத்தர குடும்பங்களுக்கிடையே நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைபோல விவசாயிகளுக்கான கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் இந்தியா முழுவதும் 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் தாக்கலில் வரி உயர்த்தியதால் மின்சார சமையலறை புகைபோக்கி, தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செம்பு, ரப்பர், சிகரெட் ஆகிய பொருட்களின் விலை உயரும்.
கேமரா, மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி, எத்தில் ஆல்கஹால், ஆகிய பொருட்களின் மீதான வரி குறைப்பால் விலை குறையும்.
செல்வம்
“இந்தியப் பொருளாதாரம் 10-ஆவது இடத்திலிருந்து 5-வது இடம்”: நிர்மலா சீதாராமன்