19,000 ஊழியர்களுக்கு BSNL விருப்ப ஓய்வு? – காரணம் இதுதான்!

Published On:

| By Selvam

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 19,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் (வி.ஆர்.எஸ்) முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து நிதி நிலையை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க உள்ளது. இது ஒட்டுமொத்த பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் 35 சதவிகிதமாகும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் ரூ.7,500 கோடியை ஊழியர்களின் ஊதியத்துக்காக செலவிட்டு வருகிறது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 38 சதவிகிதம் ஆகும்.

இந்த செலவினத்தைக் குறைத்து ஆண்டுக்கு ரூ.5,000 கோடியாகக் குறைக்கும் நோக்கத்தில் இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த பி.எஸ்.என்.எல் ரூ.1,500 கோடியை மத்திய அரசிடம் இருந்து கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் விருப்ப ஓய்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: டார்க் கலர் நெயில் பாலிஷ் விரும்பிகளா நீங்க? ஒரு நிமிஷம்!

அம்பேத்கர் – பெரியார் தத்துவப் பாதையில் இந்தியாவை செலுத்துவதுஎப்படி?

டாப் 10 நியூஸ்: கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திறப்பு முதல் அதிமுக ஆர்ப்பாட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா: அரிசி வடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share