33.8 டிரில்லியன் யு.எஸ். டாலர்கள்: இந்தியாவில் இருந்து பிரிட்டன் கொள்ளையடித்த தொகை!

Published On:

| By Kumaresan M

கடந்த 1765 ஆம் ஆண்டு முதல் 1900ஆம் ஆண்டு வரை பிரிட்டன் இந்தியாவில் இருந்து 33.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஜனவரி 20 ஆம் தேதி Oxfam அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் மேக்கர்ஸ் அல்ல டேக்கர்ஸ் என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், கூறியிருப்பதாவது, ”பிரிட்டனின் ஜவுளித்துறைக்கு எதிரான கொள்கைகள் இந்தியாவின் டெக்ஸ்டைல் துறையை அழித்தது . 1975 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா உலக தொழில்துறையில் நல்ல முன்னேற்றத்தில் இருந்தது. உலகில் உற்பத்தியாகும் பொருட்களில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் இருந்து உற்பத்தியானது. அதாவது உலகின் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதத்தை இந்தியா கொண்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு வாக்கில் 2 சதவிகிமாக குறைந்தது. இந்தியாவை பணக்கார அடிமையாக பிரிட்டன் கருதியது.

தற்போது, இங்கிலாந்திலுள்ள பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. இந்தியாவில் இருந்து கொள்ளையடித்த பணத்தில் பிரிட்டனின் 10 சதவிகித பணக்காரர்கள் 52 சதவிகிதத்தையும் நடுத்தர வர்க்கத்தினர் 32 சதவிகிதத்தையும் பெற்றனர். கி.பி. 1830 முதல் 1920 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள், சீனர்கள், ஆப்ரிக்கர்கள், ஜப்பானியர்கள் என 37 லட்சம் பேர் பிரிட்டன் காலனி நாடுகளுக்கு தொழிலாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

1875 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தின் உயர் அதிகாரிகள், நிர்வாகத்திலுள்ள உயர் அதிகாரிகள் அதிக சம்பளம் பெற்றவர்களாக இருந்தனர். 1940 ஆம் ஆண்டு வாக்கில் இவர்களின் குடும்பத்தினர் மிகப் பெரிய தொழிதிபர்களாக வங்கியை தொடங்கியவர்களாக, வர்த்தகர்களாக மாறியிருந்தனர். அதோடு, காலனி நாடுகளை கட்டுக்குள் வைத்திருக்க இந்தியாவில் ஒபியம் உற்பத்தியை பெருக்கினர். இவற்றின் பெரும் பகுதியை சீனாவுக்கு அனுப்பி பெரும் பணம் பார்த்தனர். கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி மற்றும் உப்பு ஏற்றுமதிக்கு அடுத்ததாக ஒபியம் உற்பத்தி பெரும் வருவாயை அள்ளி கொடுத்தது. 1890 மற்றும் 1920 ஆம் ஆண்டு வரை பிரிட்டன் ஆட்சியில் இந்தியாவில் 59 லட்சம் மக்கள் இறந்தனர்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel