பிரிட்டன் ராணிக்கு கொரோனா தொற்று உறுதி!
பிரிட்டன் ராணி கன்சார்ட் கமிலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மனைவி கன்சார்ட் கமிலா (75). இவர் சில தினங்களாகப் பருவ மாற்றத்தால் ஏற்படும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி, தலைவலி போன்ற அறிகுறிகளுக்குப் பிறகு சோதனை மேற்கொண்டதில் ராணி கன்சார்ட் கமிலாவிற்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பக்கிங்ஹாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால் அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரக் காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதாகவும் அரண்மனை அறிக்கை கூறுகிறது.
ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி கன்சார்ட் கமிலா கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் 2வது முறையாக அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்-க்கும் கடந்த ஆண்டில் லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.
மோனிஷா
கிச்சன் கீர்த்தனா: சொக்கவைக்கும் சோயா சங்க்ஸ் ரைஸ்!
பிரதமரை சந்தித்த நடிகர்கள் யஷ், ரிஷப் ஷெட்டி: முக்கிய கோரிக்கை!