உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயதான பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆர்த்தி, பிரிட்டனின் உயரிய விருதான ‘அமல் குளூனி’ விருதை பெற்றுள்ளார்.
பெண் ஆட்டோ ஓட்டுநர்:
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 18 வயதான பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆர்த்தி. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘பிங்க் ஈ-ரிக்ஷா’ என்ற திட்டத்தை ஆர்த்தி முன்வைத்தார்.
பெண்களுக்கு மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஆட்டோக்களை மானிய விலையில் கொடுத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பையும், மற்ற பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தையும் உறுதி செய்வது தான் இந்த திட்டத்தின் இலக்கு.
இந்த திட்டத்தில் விதவைகள் மற்றும் குடும்பத்தை தனியாக காப்பாற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானிய விலையில் மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மின்சார ஆட்டோக்கள் திட்டத்திற்கு பிரின்ஸ் ட்ரஸ்ட் இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிதியுதவி செய்து வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஆர்த்தி தொடங்கிய இந்த ஈ-ஆட்டோ திட்டம் தற்போது நாடு முழுவதும் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
அமல் குளூனி விருது
பிரின்ஸ் டிரஸ்ட் இண்டர்நேஷனல் என்பது பிரிட்டன் மன்னர் சார்லஸ் இளவரசராக இருந்த போது தொடங்கப்பட்ட அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளையானது, தற்போது கிங்ஸ் டிரஸ்ட் இண்டர்நேஷனல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 நாடுகளில் இருந்து தங்கள் பகுதியில் மாற்றங்களை உருவாக்கிய இளைஞர்கள் 20 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு “அமல் குளூனி” விருது என்று பெயர்.
பிரிட்டனில் விருது பெற்ற இந்திய பெண் ஆட்டோ ஓட்டுநர்
பிங்க் இ-ஆட்டோ திட்டத்தின் மூலம் பல்வேறு பெண்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்காக உத்தரப் பிரதேச பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆர்த்திக்கு, பிரிட்டனின் உயரிய விருதான ‘அமல் குளூனி விருது’ அளிக்கப்பட்டது.
இதற்காக, லண்டனுக்கு சென்ற ஆர்த்திக்கு, ‘அமல் குளூனி பெண்கள் மேம்பாட்டு விருதினை’ பிரின்ஸ் அறக்கட்டளை கடந்த 22ஆம் தேதி வழங்கியது. அப்போது ஆர்த்தி மன்னர் சார்லஸையும் சந்தித்து பேசி புகைப்படமும் எடுத்துகொண்டார்.
விருதினை பெற்ற ஆர்த்தி கூறுகையில், “பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்கும் பெண்களுக்கு தற்போது நான் ஒரு முன்னுதாரணமாக மாறி இருப்பது பெருமையாக உள்ளது. நான் முதன்முறையாக லண்டன் வந்துள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மே 22ஆம் தேதி மூன்றாம் மன்னர் சார்லஸை பக்கிங்ஹாம் பேலஸில் சந்தித்து பேசினேன். மன்னரை சந்தித்த அந்த தருணங்களை என்னால் மறக்கவே முடியாது.மன்னர் சார்லஸ் அனைவரிடமும் அன்புடன் பேசி பழகுகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள என்னுடைய குடும்பத்தினருக்கும் அவர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்” என்றார்.
பிங்க் இ-ஆட்டோ திட்டத்தை பற்றி அவரிடம் நான் கூறியபோது, அதற்காக பாராட்டினார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாமீனை நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!