உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு வேலையில் இல்லை என்ற காரணத்தினால், ரூ.1.20 லட்சம் சம்பளம் வாங்கிய மாப்பிள்ளையை மணப்பெண் திருமணம் செய்ய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து.
சட்டீஸ்கர் மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் என்ஜீனியராக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மாதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். 27 வயதான இவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்த மாப்பிள்ளைக்கு 6 பிளாட் உள்பட ஏராளமான சொத்துக்களும் உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபாருக்காபாத் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை அந்த இளைஞருக்கு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் (நவம்பர் 26) திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்து வந்துள்ளது.
இந்த சமயத்தில் மணப் பெண்ணுக்கு மாப்பிள்ளை அரசு வேலையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மணப்பெண் மறுத்து விட்டார். இரு வீட்டாரும் மாப்பிள்ளை வாங்கும் சம்பளம், சொத்துக்கள் உள்ளது பற்றி எடுத்து கூறியும் மணப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். கடைசியாக மாப்பிள்ளையின் சம்பள ஸ்லிப்பை காட்டியும் மணப்பெண் மனம் இறங்கவில்லை. திருமணம் நின்றும் போனது.
இதையடுத்து, மாப்பிள்ளை பெரும் சோகமடைந்தார். பெற்றோரும், உறவினர்களும் நண்பர்களும் அவரை தேற்றி ஆறுதல் கூறி மணமண்டபத்தில் இருந்து அழைத்து சென்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. கல்யாண கனவுடன் இருந்த இளைஞரின் கனவை அந்த பெண் சிதைத்து விட்டதாக கூறி நெட்டிசன்கள் அந்த இளம்பெண்ணை வசை பாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“ஸ்டாலினைப் போல் அரசியல் ஞான ஒளி எனக்கில்லை” – ராமதாஸ் பதிலடி!
சவரனுக்கு ரூ.120 குறைவு…. இன்றைய தங்கம் எவ்வளவு?