முடிவுக்கு வரும் காஸா போர்: இறுதி வரைவு அறிக்கை தயார்!

Published On:

| By christopher

2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி காஸாவை ஆட்சி செய்து வரும் பாலஸ்தீன இஸ்லாமியக் குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லா தாக்குதலை நடத்தியதில் 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 253 பணயக் கைதிகளையும் பிடித்து வைத்துக் கொண்டது.

அதனால் மத்திய கிழக்கு பகுதியான காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் கடந்த 15 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த சில நாள்களில் இறுதி வடிவத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் நேற்று (ஜனவரி 13) தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவிடம் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனைத்தொடர்ந்து மேற்கண்ட இரு பிரிவு தலைவர்களும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸ் தரப்புக்கு கத்தார் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னொருபுறம் இஸ்ரேல் தரப்புக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் ஆகிய இவ்விரு விவாதங்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் மையப் புள்ளிகளாக உள்ளன.

இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியான காஸாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த சில நாள்களில் இறுதி வடிவத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதற்கு முன்பாகவே காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமென எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: தினமும் இரவில் பால் குடிப்பது நல்லதா?

பியூட்டி டிப்ஸ்: ஏசி அறையிலேயே பணியாற்றுபவரா நீங்கள்?

நீட் தேர்வை வைத்து திமுக மக்களை ஏமாற்றுகிறதா?

டாப் 10 நியூஸ் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் ரவியின் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : தால் வடா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share