பிரேசில் நாட்டில் சௌபாலோ நகரத்தின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 61 நபர்களும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. brazil plane crash
பிரேசில் நாட்டின் உள்ளூர் நேரப்படி, நேற்று (ஆகஸ்ட் 9) மதியம் பிரேசிலின் பரானா மாநிலத்தின் கஸ்காவெல் நகரத்திலிருந்து சௌபாலோ நகரத்தை நோக்கி வோபாஸ் ஏர்லைனின், ATR 72-500 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானமானது சௌபாலோ நகரத்தை நெருங்கிய போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 57 பயணிகளும் 4 விமான குழுவினரும் பலியானார்கள் என்று வோபாஸ் ஏர்லைன் அறிவித்துள்ளது. விமானம் விழுந்த பகுதியில் யாரும் பலியாகவில்லை. ஒரு வீடு மட்டும் சேதம் அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பிரேசில் நாட்டு ஜனாதிபதி லுலா டா சில்வா, இந்த விபத்து குறித்தான செய்தி கிடைத்தவுடன், தான் உரையாற்றிக் கொண்டிருந்த நிகழ்வை நிறுத்திவிட்டு, அனைவரையும் எழுந்து நின்று இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், சௌபாலோ மாநிலத்தில் 3 நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில ஆளுநர் டார்சிசியோ கோமஸ் டி ஃபிரிடாஸ் அறிவித்தார். இந்த விபத்து குறித்து பிரேசில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.brazil plane cras
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு!
பெண்ணாகவே வாழ்கிறேன்… பாலின விவகாரத்தில் சிக்கி தங்கம் வென்ற இமானே உருக்கம்!
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?