எமனை ஏமாற்றிய ஒற்றைப் பயணி… பிரேசில் விமான விபத்தில் விநோதம்!

Published On:

| By Selvam

பிரேசிலில் சாபாலோ நகரில் இருந்து 80 கி.மீ தொலைவில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 58 பயணிகளும் 4 ஊழியர்களும் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், பயணிகளில் ஒருவர் உயிர் தப்பிய விநோதம் நடந்துள்ளது.

ரியோடிஜெனிரோ நகரைச் சேர்ந்த ஆட்ரியானோ ஆசிஸ் என்ற இளைஞர்தான் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியவர். பிரேசிலில் உள்ள பரானா மாகாணத்திலுள்ள கேஸ்கேவிலிருந்து சாபாலோ நகருக்கு விமானம் புறப்பட தயாரான போது, கடைசி நேரத்தில் ஆட்ரியானோ ஆசிஸ் விமானத்தை பிடிக்க வந்துள்ளார்.

தாமதமாக வந்ததையடுத்து, கவுண்டரில் இருந்த ஊழியர்கள், ஆட்ரியானோவை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இவர், கத்தி சண்டையிட்டும் விமான நிலைய ஊழியர்கள் உறுதியாக அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால், அந்த விமானத்தில் ஆட்ரியானோவால் பறக்க முடியாமல் போனது.

சிறிது நேரத்தில் சாபாலோ நகரில் தான் பயணம் செய்ய விருந்த விமானம் விபத்துக்குள்ளானதையும் அதில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துபோனார்கள் என்கிற தகவலையும் கேட்டு ஆட்ரியானோ ஆடிப்போனார்.

தானும் அந்த விமானத்தில் பயணித்திருந்தால் தற்போது உயிருடன் இருக்க மாட்டோம் என்பதை உணர்ந்து கொண்ட அவர், நேரே விமான நிலையத்துக்கு ஓடினார். அங்கு தன்னை அனுமதிக்க மறுத்த ஊழியரை கட்டித் தழுவி பாராட்டியதோடு, நீங்கள் உங்கள் கடைமையை செய்ததால்தான், தான் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது, ஆட்ரியானோ ஆசிஸ் எமனை ஏமாற்றி விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எம். குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேம்நாத் விடுதலை!

ஒலிம்பிக்: 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்த அமன்… வினேஷ் போல ஆகாமல் தப்பித்தார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment