கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள திருப்பணித்துராவில் எஸ்.ஐ. யாக ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவரின் பெயர் தயலால்.32 வயதான இவர் சிறந்த பாடி பில்டர். கடந்த 16 ஆண்டு காலமாக இவர் பாடி பில்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்.
2025 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள போலீஸ் அதிகாரிகளுக்காக பாடி பில்டிங் போட்டியில் இவர் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார். கேரளாவில் இருந்து போட்டியில் கலந்து கொள்ளும் முதல் போலீஸ் இவர்தான்.
தினமும் சிக்கன், முட்டை, போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுகிறார். தயாலால் தனது உணவில் எண்ணெய், உப்பு, மசாலா எதுவும் சேர்த்துக் கொள்வதில்லை .
View this post on Instagram
இந்த நிலையில், சபரிமலையில் மண்டல மற்றும் மகர பூஜை தொடங்கியுள்ளதால் இவருக்கு அங்கு டூட்டி போடப்பட்டுள்ளது. இதனால், அவரால் தற்போது பயிற்சியில் ஈடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், சபரிமலையில் பணி பார்ப்பதால் தற்போது அவர் சைவ உணவுக்கு மாறியுள்ளார். இந்த பணியை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சிறிய அளவிலான பயிற்சிகளை மேற்கொள்வதாகவும், வீடு திரும்பியதும் பழைய உணவு முறைக்கு மாறப் போவதாகவும் தயாலால் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு வந்ததும் முதன் முதலில் 18 ஆம் படிக்கட்டுகளில் ஏறி கோவிலுக்கு சென்று ஐயப்பனை வழிபட்டார். அந்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். கேரள போலீசுக்கிடையே நடைபெறும் ஆணழகன் போட்டியில் 4 முறை இவர் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டூருக்கு பிளான் பண்றீங்களா?…இதோ 2025 ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல்!
அதானியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழி இல்லையா? 1997 ஒப்பந்தம் சொல்வது என்ன?