நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாபி செம்மனூருக்கு சிறையில் முதல் நாள் இரவில் 2 சப்பாத்தி மற்றும் காய்கறி உணவாக கொடுக்கப்பட்டது.
பிரபல ஜூவல்லரி நிறுவனமான பாபி செம்மனூர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பாபி செம்மனூர் நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி அபிராமியிடத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால், மன்னிப்பு கேட்க அவசியமில்லை என்றார். அவரது வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம், ஜாமீன் தாருங்கள் என்று நீதிபதியிடம் முறையிட்டனர்.
ஆனால், போலீசார் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்திருப்பதால் ஜாமீன் தர மறுத்த நீதிபதி, பாபியை 14 நாள் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார். இதை கேட்டதும் பாபிக்கு பி.பி. எகிறி வியர்த்து ஊற்றி விட்டது. தொடர்ந்து , பொதுமருத்துவமனையில் அவரின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் ஆதரவாளர்களை சமாளித்து பாபியை வாகனத்தில் ஏற்றி சென்று கக்கநாடு சிறையில் அடைத்தனர்.
கக்கநாடு சிறையில் பிளாக் ஈ முதல் செல்லில் அடைக்கப்பட்டுள்ள இந்த 2,500 கோடி அதிபதியுடன் மேலும் 5 சிறைக்கைதிகள் உள்ளனர். 6வதாக பாபி அங்கு அடைக்கப்பட்டுள்ளார். செல்லில் இவருடன் அடைக்கப்பட்ட மற்றவர்கள் திருட்டு மற்றும் போதை மருந்து கடத்திய வழக்குகளில் கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபிக்கு இரவு உணவாக இரு சப்பாத்தியும் காய்கறி கூட்டும் வழங்கப்பட்டது. ஆனால், அவற்றை பாபி உண்ணவில்லை. சிறையில் இரவு உறக்கமில்லாமல் தவித்துள்ளார். சும்மா கண்ணை மூடிக் கொண்டு கிடந்துள்ளார். கேரளாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பாபியிடத்தில் மற்ற கைதிகள் பேச முயன்றுள்ளனர். ஆனால், அவர்களுடன் பேசுவதை பாபி தவிர்த்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வெள்ளை சட்டையில் அதிமுக… ’சார்’ பதாகையுடன் திமுக : சட்டமன்றத்தில் மாறிய காட்சிகள்!
”சில மண்ணாந்தைகளுக்கு இது புரியாது” : சீமானை விளாசிய துரைமுருகன்