ஒரு மணி நேரத்தில் 50 ராணுவ வீரர்களை கொன்ற கிளர்ச்சிப் படை!

Published On:

| By christopher

BLA killed 50 pak soldiers in one hour

பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு பதிலடியாக சிறைபிடிக்கப்பட்ட 50 ராணுவ வீரர்களை கொன்றதாக பலூச் கிளர்ச்சிப் படை இன்று (மார்ச் 12) தெரிவித்துள்ளது. BLA killed 50 pak soldiers in one hour

பலுசிஸ்தானின் போலான் மாவட்டம் அருகே ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினை ராக்கெட்டால் சுட்டு பலூச் விடுதலைப் படை என்ற கிளர்ச்சிக் குழு நேற்று கடத்தியது. மேலும் அதில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான மக்களை பணயக் கைதிகளாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சிக்கியவர்களை மீட்க பாகிஸ்தான் ராணுவத்தினர் பலூச் விடுதலைப் படையோடு நேரடி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று இரவு வரை பணயக் கைதிகளாக இருந்த 80 பயணிகளை மீட்டது ராணுவம்.

தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 155 பயணிகளை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து மீட்டுள்ளதாகவும், 27 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த 37 பேர் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் பாகிஸ்தான் அரசு நடத்தும் ‘ரேடியோ பாகிஸ்தான்’ இன்று செய்தி வெளியிட்டது.

பாகிஸ்தான் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கொதிப்படைந்த கிளர்ச்சிப்படையினர், கடந்த ஒரு மணி நேரத்தில் சிறைபிடிக்கப்பட்ட 50 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தூக்கிலிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 150 பணயக்கைதிகள் தற்கொலை படையினரின் அருகில் நிறுத்தப்பட்டள்ளதாகவும் பி.எல்.ஏ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு தற்போது இறுதி எச்சரிக்கை விடுத்து பலூச் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இப்போது, ​​ஒரு நாள் கடந்துவிட்டது, ஆக்கிரமிப்பு (பாகிஸ்தான்) அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் மட்டுமே உள்ளது. கொடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கைக்குள் பாகிஸ்தான் கைதிகள் பரிமாற்றத்தில் நடைமுறை முன்னேற்றம் அடையவில்லை என்றால், அனைத்து பணயக்கைதிகளும் பலூச் தேசிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அங்கு, அவர்கள் பலூசிஸ்தானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரிக்கப்படுவார்கள். இந்த விசாரணை உடனடியாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், பலூச் தேசிய சட்டங்களின்படி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share